தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழுத்தில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்த முதலை குட்டி - விசாரணை தீவிரம் - deceased baby crocodile found near varaha river

விழுப்புரம்: வராக நதிக் கரையில் சுமார் ஒன்றரை அடி நீள முதலைக் குட்டி கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

deceased-baby-crocodile-found-near-varaha-river
இறந்து கிடந்த முதலை குட்டி

By

Published : Jan 10, 2021, 5:24 PM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செவலப்புரை கிராமத்தில் வராக நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் பாறை மீது இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலை குட்டி ஒன்று இருந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டனர்.

இதையடுத்து, ஆற்றில் முதலை இருப்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை பலகையை மேல்மலையனுார் வருவாய்த் துறையினர் வைத்தனர். ஆனால் அதையும் மீறி தொடர்ந்து ஆற்றில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் வராக நதிக் கரையில் சுமார் ஒன்றரை அடி நீள முதலைக் குட்டி ஒன்று கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தது.

இதன் பின்னர் செஞ்சி வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினர், இறந்து கிடந்த முதலைக் குட்டியை எடுத்துச்சென்று கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்து புதைத்தனர். மேலும், முதலை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க... பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் முதலை உலா : ஆபத்தை அறியாமல் செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details