விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், "சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும்போதும், சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன், இணையம் வாயிலாக மக்களை ஏமாற்றி, பணத்தைப் பறித்துவிடுகிறார்கள்.
இதுபோன்ற சைபர் குற்றங்கள் நடக்கும்போது, உடனடியாக பொதுமக்கள் 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, உடனே புகார் தெரிவித்தால், இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம். தாமதமாக புகார் கொடுக்கும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்பது கடினம்.