விழுப்புரம்:வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் வானூர் பகுதியில் நடந்தது.
அப்போது பேசிய அவர், " திமுக ஆட்சிக்கு வரவேண்டும் எனப் பெருவாரியான மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. நாம் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருப்போம். ஆனால், தோல்வியடைந்ததற்கு காரணம் பாஜக கூட்டணிதான். இதனால், நாம் முழுமையாக சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டோம்.
சிறுபான்மையினருக்கு நம்மீதோ, நமது கட்சியின்மீதோ, நமது பத்தாண்டு கால ஆட்சியின் மீதோ எந்த கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை. அவர்கள் பாஜகவுடன் கொள்கை ரீதியாக முரண்பட்டு இருந்தார்கள். அந்தசமயத்தில், நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியைத் தழுவினோம். அதற்கு உதாரணம் நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதி.