விழுப்புரம்: வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று(நவ.06) அதிமுகவின் 51-ஆவது தொடக்கவிழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40 சதவிகித அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தானும், தன் குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கனவு காண்கிறார். அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்த போது அச்சமயம் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், இப்பொழுது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி கொடுக்கும் பொழுது ஏன் மொளம் காக்கிறார்கள். பொன்முடி மகனுக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.