விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், ரூ.1,509 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் விழுப்புரம் காந்தி சிலை முன்பாக, இன்று (ஆக. 13) தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - Gandhi Statue in Villupuram
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழுப்புரம் காந்தி சிலை முன்பு சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறுகையில், "விழுப்புரம் மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இதனை அரசியல் காழ்புணர்ச்சியோடு திமுக அரசு ரத்து செய்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி, பொதுமக்களுடைய குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிமுக சார்பில் மிக விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியனென்று பெருமிதம் கொள்வோம்