தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாக கருத்து! எம்.பி. சி.வி சண்முகம் மீதான வழக்கு ஒத்திவைப்பு! - tamilnadu CM

CV Shanmugam appears in court : தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

CV Shanmugam
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 2:11 PM IST

விழுப்புரம் : செஞ்சியை அடுத்த நாட்டார் மங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதலமைச்சரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதிமன்றத்திலும் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சி.வி சண்முகம் நேரில் ஆஜராகும்படி நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (நவ. 6) சி.வி சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரனையை நவம்பர் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:தொடரும் ஐடி ரெய்டு! அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details