விழுப்புரம்:விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில், கெட்டுப் போன மட்டன் பிரியாணியை வழங்கியதாக லூயிஸ் கிறிஸ்டினா என்ற பெண் கெட்டுப் போன பிரியாணியுடன் உணவகத்தின் முன்பு, கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டைச் சேர்ந்தவர், லூயிஸ் கிறிஸ்டினா. இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில் ரூ.230க்கு மட்டன் பிரியாணி வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் பிரியாணியை வீட்டுக்குச் சென்று சாப்பிட பிரித்த நிலையில், அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லூயிஸ் கிறிஸ்டினா, பிரியாணியை கடைக்கு எடுத்துச் சென்று கடை ஊழியரிடம், பிரியாணி கெட்டுப்போய் உள்ளது என முறையிட்டுள்ளார்.
இதற்கு கடை ஊழியர்கள் எந்தவித பதிலும் அளிக்காததால், அவர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:வணியம்பாடி விபத்து மீட்பு பணியின் போது உயிரிழந்த காவலர் முரளி குடும்பத்திற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆறுதல்!