காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது " இந்தியாவின் பன்மைத்துவத்தை குலைக்கும் வகையிலும் மாநில அதிகாரங்களை பறிக்கும் வகையிலும் பல்வேறு சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றிவருகிறது.
காஷ்மீர் மக்கள் உணர்வுகளின் மீது கொடூர தாக்குதல்! - சிபிஎம்
விழுப்புரம்: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்த பாஜக அரசு அம்மக்களின் உணர்வுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்
இந்நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயல் காஷ்மீர் மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்த சவால். இது ஒரு ஜனநாயகப் படுகொலை. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
பாஜக அரசின் அனைத்து செயல்களுக்கும் அதிமுக அரசு ஆதரவளித்து பாஜகவின் மறுபதிப்பாக விளங்குகிறது. வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.