தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு - காவலர்களை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு - பெண் ஐபிஎஸ் அதிகாரி வழக்கு

பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் தொல்லை வழக்கு விசாரணையில் நாளை மறுநாள் (ஜூன் 17) அரசு தரப்பு சாட்சிகளான மூன்று காவல் துறையினரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு
பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு

By

Published : Jun 15, 2022, 4:50 PM IST

விழுப்புரம்:பெண் ஐபிஎஸ் அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது.

அரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் விசாரணையில் இன்று பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பினரின் குறுக்கு விசாரணை நிறைவடைந்தது.

நாளை மறுநாள் (ஜூன் 17) அரசு தரப்பு சாட்சிகளான மூன்று காவல் அலுவலர்களை ஆஜர்படுத்த சிபிசிஐடி காவல் துறையினருக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:கொலை வழக்கு கைவிடப்பட்டதாக நினைத்து சொந்த ஊர் திரும்பியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details