இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கிடையில் கரோனா வைரஸ் தொற்றை முறியடிக்கும் வகையில் மார்ச் 22ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
வாசலில் விளக்கேற்றி வழிபாடு இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பெண்கள் தங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு கரோனா தொற்று வராமல் இருக்க பசுமாட்டு சாணத்தால் வாசல் தெளித்து, மாட்டு கோமியத்துடன் மஞ்சள், சிவப்பு கலந்து ஒரு கலசத்தில் வைத்து வீட்டு வாசலில் வைத்து விளக்கேற்றி வழிபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'விரைவில் நாடு திரும்ப வேண்டும்' - இளைஞரின் காணொலி பதிவு