தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் ஒரே நாளில் 62 பேருக்குக் கரோனா! - விழுப்புரத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா!

விழுப்புரம்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 62 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா!
விழுப்புரத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா!

By

Published : Jun 27, 2020, 10:50 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதையடுத்து விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட செவிலியர் மூலம் வீடு வீடாக நேரில் சென்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 62 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 765ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details