விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா நோய் கிருமியின் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தனி சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதையும், விழுப்புரம்-புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பொம்மையார்பாளையம் பகுதியில் கரோனா நோய் கிருமி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மருத்துவப் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளதையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆரோவில் பகுதியில் அதன் நிர்வாகத்தினரிடம் கரோனா நோய்க் கிருமியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் தலைமையேற்று ஆலோசனைகளை வழங்கினர்.