தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 48 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று விழுப்புரம் லஷ்மி நகரில் வசித்து வரும் மருத்துவர் கைலாஷ் (30) என்பவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் விழுப்புரம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், கிருஷ்ணகிரியில் உள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களைச் சந்திக்க கைலாஷ் கடந்த வாரம் கிருஷ்ணகிரி சென்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.