விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (77). இவர் கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
பின்னர் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை தங்கமணி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரத்தில் கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு! - Corona death toll rises in Viluppuram
விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 77 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
Corona death toll rises in Viluppuram
இதையும் படிங்க: இந்தியாவில் 12 லட்சத்தை தாண்டிய கரோனா