தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் 4 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
விழுப்புரத்தில் இரண்டாயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு! - villupuram corona count
விழுப்புரம்: இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
villu
அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 39ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து பூரண குணமடைந்து 1,235 பேர் வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பால் 26 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.