தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசிய சீமான்' - காங்கிரஸார் புகார்! - seeman latest speech

விழுப்புரம்: சீமான் மீது , ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசியதாக முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

seeman latest speech, ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு

By

Published : Oct 14, 2019, 1:20 PM IST

Updated : Oct 14, 2019, 1:27 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு காரசாரமான பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற நோக்கில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நேமூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம்' என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

seeman latest speech, ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு

அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி, வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி. ரமேஷ் ஆகியோர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: #Exclusive: 'மத்திய அரசு அனுமதித்தால் நான் தயார்' - அமர்நாத் ராமகிருஷ்ணா!

Last Updated : Oct 14, 2019, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details