மத்திய அரசு மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் சத்யாகிரக ஆர்ப்பாட்டம் - விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் அறவழியில் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
congress-hold-satyagraha-protest-for-repeal-farm-bills
இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபன்னா, ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்பார் என நம்பிக்கைத் தெரிவித்தார்.