விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசணை பகுதியைச் சேர்ந்த சந்துரு (24), என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தியாகு(35), என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று (ஜனவரி 20) இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் நேற்று இரவு 8.30 மணியளவில் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே இரு தரப்பினரும் கத்தி, அருவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் சந்துரு, தியாகு, கார்த்திக்(23) ஆகிய மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த வீரர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்துரு, கார்த்தி ஆகிய இருவரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக ரோசணை காவல்துறையினர், திண்டிவனம் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர். போக்குவரத்து மிகுந்த சாலையில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக கடத்த முயன்ற 54 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 பேர் கைது!