விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் நகர் இளைஞர்களும், அதே பகுதியில் உள்ள தீடீர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் நேற்று இரவு (ஜூன் 8) அப்பகுதியில் உள்ள தைலந்தோப்பில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இவர்கள் மது அருந்தும் போது மது போதையில் இரு தரப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ராம்தேவ் என்கின்ற இளைஞர் செல்லியம்மன் கோயில் வழியாக சென்றபோது அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.