தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்; 6 பேர் கைது! - கள்ளக்குறிச்சி திருட்டு துப்பாக்கி செய்திகள்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம்: உளுந்தூர்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கி செய்தவர்,மற்றும் 6 பேர் கைது, அவர்களிடம் இருந்து எட்டு நாட்டுகள்ளத் துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனா்.

By

Published : Dec 16, 2019, 1:19 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள அரசின் காப்புகாடுகளில் அரிய வகை உயிரினங்களான மான்கள், மயில்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை சமூக விரோதிகள் கள்ளத் துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடி அழித்து வருகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஆறு பேர் கைது

இதனைத் தொடர்ந்து வேட்டைக்காரர்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மாணிக்கம், முதல்நிலைக் காவலர்கள் மதுரை வீரன், இளந்திரையன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், எறையூர் - அதையூர் ரோட்டில் உள்ள காட்டுக்கோயில் அருகே கையில் கள்ள நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த டோனி (எ) அந்தோணிபுஷ்பராஜ், நடு காளை (எ) அந்தோணிசாமி, முட்டகன்னான் (ஏ) ஜோசப்ராஜ், கிளி (எ) லியோபிரகாஷ், ஜான்ரொசரியோ ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், கள்ளத் துப்பாக்கி செய்து விற்பனை செய்த சின்னசேலம் வட்டம் நாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ஊமையன் (எ) துரைசாமி என்பவரையும் கைது செய்தனர். மேலும், இவர்களிடமிருந்து எட்டு நாட்டுத் துப்பாக்கிகள், துப்பாக்கி செய்ய பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கள்ளத்துப்பாக்கி விவகாரம்: பெண் உள்பட மூன்று பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

ABOUT THE AUTHOR

...view details