தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: 3 பேர் மீது வழக்குப்பதிவு!

விழுப்புரம்: மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: 3 பேர் மீது வழக்குப்பதிவு...!
பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: 3 பேர் மீது வழக்குப்பதிவு...!

By

Published : Aug 28, 2020, 12:27 PM IST

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அண்மையில் புகார் எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வேளாண்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஜெயந்தி, பழனிக்குமார், பாரி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் வேளாண் இயக்குநர் அளித்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...ஓஎல்எக்சில் வாடகை காரை விற்பனை செய்ய முயற்சி: காவல் துறை வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details