தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வக்ஃபு நிலங்களை ஆக்கிரமித்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது புகார்! - வக்ஃபு நிலங்களை ஆக்கிரமித்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது புகார்

விழுப்புரம், செஞ்சி பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் மஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக முன்னாள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர், தலைமைச் செயலாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

வக்ஃபு  நிலங்களை ஆக்கிரமித்ததாக  அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது புகார்
வக்ஃபு நிலங்களை ஆக்கிரமித்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது புகார்

By

Published : May 3, 2022, 7:24 PM IST

சென்னை:விழுப்புரம், செஞ்சி பெரிய பள்ளிவாசலுக்குச்சொந்தமான நிலத்தை அமைச்சர் மஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக முன்னாள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தலைவர் ஹைதர் அலி தலைமைச் செயலாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், 'சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கடந்த 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக இருந்தபொழுது செஞ்சி பெரியகரம் பள்ளிவாசலுக்குச் சொந்தமான 460 சதுர மீட்டர் அளவிலான நிலத்தை வக்ஃப் வாரிய சட்டத்தைப் பயன்படுத்தி, அமைச்சர் செஞ்சி மஸ்தான், தன்னுடைய மனைவி பெயரில் போலியான ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமைப்பு செய்துள்ளார்.

இதற்கு உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக் கமிஷன் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை பெரியகரம் பள்ளிவாசலுக்கு மீட்டுத்தர வேண்டும்’ என தலைமைச்செயலாளர் இறையன்புவிடம், முன்னாள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் ஹைதர் அலி புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:தேர்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details