விழுப்புரம் மாவட்டத்தில் சாலாமேடு, சித்தேரிகரை, வளவனூர், ஏரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழங்குடி இந்து மலைகுறவர் சமூகத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்கான சாதி சான்றிதழ் கேட்டும் விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் அருகிலுள்ள கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பலருக்கு இந்து மலைக்குறவர் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இவர்களுக்கான சாதி சான்றிதழ் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
சாதி சான்றிதழ் கேட்டு கதறி அழுத மாணவி! - மலைக்குறவர்கள்
விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு வந்த மாணவி ஒருவர் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
community_certificate_issue student sobbing
இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மலைக்குறவர்கள் இன்று (செப்டம்பர் 17) தங்களுக்கான சாதி சான்றிதழ் கேட்டும், தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அப்போது அங்கு வந்த மாணவி ஒருவர் தங்கள் சமூக மக்களின் நிலை குறித்து கதறி அழுததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
TAGGED:
மலைக்குறவர்கள்