விழுப்புரம் அருகேயுள்ள வ.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவருக்கு அண்மையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய காவலர்... நேரில் சென்று நலம் விசாரித்த ஆட்சியர்
விழுப்புரம்: கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போக்குவரத்து காவலரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதையடுத்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை முடிந்து பூரண உடல்நலத்துடன் வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் வீடு திரும்பிய போக்குவரத்து காவலர் பாண்டியனை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
மேலும் அவரது பணியை பாராட்டி நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.
இதையும் படிங்க: 'அரசு வழங்கிய இலவச சைக்கிளில் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன்' - ஈடிவி பார்த்துடன் பகிர்ந்த பிகார் சிறுமி!