ஆண்டுதோறும் அரசு சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் விழுப்புரத்தில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா இன்று முதல் வருகின்ற 27ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதற்கட்டமாக இன்று, ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மற்றும் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.