தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் தீபாவளி: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்! - கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்

விழுப்புரம்: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

co-optex
co-optex

By

Published : Oct 11, 2020, 10:42 PM IST

விழுப்புரம் மாவட்டம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா இன்று (அக்-11) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து, இந்தாண்டு புதிதாக வந்துள்ள புதிய ரக சேலைகளை அவர் பார்வையிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புதிய இரகங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் புது வரவாக குறைந்த விலையில் சேலம், திருபுவனை பட்டுப் புடவைகள், கோவை மென் பட்டுப் புடவைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், குர்தீஸ்கள், சுடிதார் மெட்டிரியல், டவல்கள் மற்றும் ஜெய்ப்பூர் போர்வைகள் ஆகியவை இந்த தீபாவளி பண்டிகைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையத்திற்கு ரூ.100 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி விற்பனையை எதிர்நோக்கும் ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details