தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலருக்கும், வாக்காளர்களுக்குமிடையே மோதல்: செஞ்சி அருகே  பதற்றம் - Vilupuram Polling Station

விழுப்புரம்: செஞ்சி தொகுதிக்குள்பட்ட நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் காவலருக்கும், வாக்காளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குச்சாவடியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

செஞ்சி அருகே காவலருக்கும், வாக்காளர்களுக்கும் மோதல்
செஞ்சி அருகே காவலருக்கும், வாக்காளர்களுக்கும் மோதல்

By

Published : Apr 6, 2021, 3:49 PM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்குள்பட்ட நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள மூன்று வாக்குச்சாவடி மையங்களில் காலையிலிருந்து வாக்காளர்கள் தீவிரமாக வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

செஞ்சி அருகே காவலருக்கும், வாக்காளர்களுக்குமிடையே மோதல்

இந்நிலையில், வாக்காளர்கள் இருசக்கர வாகனங்களை 200 மீட்டர் அளவில் வாகனங்களை நிறுத்திவிட்டு வர வேண்டுமென தேர்தல் விதிமுறை உள்ளது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள், முதியவர்களை வாகனங்களில் கூட்டிவந்து விட்டு வந்தனர்.

வாக்குச்சாவடியில் பதற்றம்

அப்போது, வெளிமாநில காவலர் வாகனங்களை லத்தியால் தட்டியபோது, வாகன கண்ணாடி உடைந்ததால் ஆவேசமடைந்த வாக்காளர்கள், பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளேவந்து அந்தக் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவலர்கள் லத்தியால் வாக்காளர்களையும், பொதுமக்களையும் அடித்து விரட்டினர். அப்போது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் காவலருடன் தள்ளுமுள்ளு வாக்குவாதம் செய்தனர்.

இதனால் 'நாங்கள் யாரும் வாக்களிக்க உள்ளே வர மாட்டோம்' என்று வெளியே சென்றனர். சுமார் ஒரு மணி நேரமாக வாக்குச்சாவடியில் பதற்றமான நிலை இருந்துவருகிறது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவலர்கள் வர வைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுடன் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'வரிசையில் நின்று வாக்களித்த வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர்!'

ABOUT THE AUTHOR

...view details