தமிழ்நாடு காவல்துறை முன்னாள் சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. கடந்த ஒன்பது நாள்களாக, பெண் எஸ்பியிடம், சிறப்பு முன்னாள் டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
பெண் எஸ்பி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - Woman IPS officer sexual harassment
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் விசாரணை மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
cjm-adjournment-ips-officer-sexual-assault-case
இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையில், பெண் எஸ்பி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கோபிநாதன் வழக்கு விசாரணையை மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மூன்று மாதங்களுக்கும் மேல் நடந்துவரும் இந்த வழக்கில் தற்போறு சாட்சிகள் விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விபத்தில் முதியவர் மரணம்: டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் கைது