கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பிரதான சாலை லேனா திரையரங்கு பகுதியில் வசிப்பவர் பைனான்சியர் சுப்பிரமணியன். நேற்று சென்னை செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர், நேற்றிரவு சின்னசேலம் கூகையூர் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.
இந்தச் சடலத்தை கண்டவர்கள் சின்னசேலம் காவல் துறையினருக்கும் ரயில்வே காவலர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே கோட்ட காவல் துறையினர் இறந்துகிடந்த சுப்பிரமணியனின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.