விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சபரிநாதன் மகள் கனிஷ்கா (8), மகன் லத்தீஷ் (5), அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மகள் ரஷ்யா (7), மகன் தர்ஷன் (5) ஆகிய நான்கு பேரும் அப்பகுதியிலுள்ள புளியங்குட்டை என்கிற மீன் குட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
குட்டையில் மூழ்கிய குழந்தைகள்
அப்போது, சிறுமிகள், சிறுவர்கள் நான்கு பேரும் குட்டையில் குளித்துள்ளனர். குட்டையில் ஆழமான பகுதிக்குச் சென்றவர்கள் சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளனர்.
விளையாடச் சென்ற குழந்தைகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் குட்டை பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, குழந்தைகள் அணிந்திருந்த ஆடைகள் குளக்கரை பகுதியில் இருந்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் உதவியுடன் குட்டையில் இறங்கி தேடியுள்ளனர்.