புதுச்சேரி மாநிலம் அரியூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் தனது மனைவி, 4 வயது மகள் கோபினியுடன், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியில் இருக்கும் தனது உறவினரான சரோஜாவின் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபினி, அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 7அடி குழியில் தவறி விழுந்தது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.