தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் முப்பெரும் விழாவை சிறப்பிக்க வரும் முதலமைச்சர்! - கள்ள்ககுறிச்சியின் துவக்கவிழா

விழுப்புரத்தில் இன்று நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

cm function
விழுப்புரத்தில் முப்பெரும் விழா! மின்விளக்குகளால் ஜொலிக்கும் கட்டிடங்கள்!

By

Published : Nov 26, 2019, 8:41 AM IST

Updated : Nov 26, 2019, 10:56 AM IST

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் இன்று (நவம்பர் 26) நடைபெறவுள்ளது.

விழுப்புரத்தில் முப்பெரும் விழா! மின்விளக்குகளால் ஜொலிக்கும் கட்டிடங்கள்!

இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சட்டக்கல்லூரி, மகளிர் கலைக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.50 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இன்று முதல் பிரித்து தனிமாவட்டமாக தொடங்க வைக்கிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதையொட்டி விழுப்புரம் நகரம், திறப்பு விழா கட்டடங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

ஹைதராபாத்தில் திரைத்துறை பிரபலங்களின் ரீயூனியன்!

Last Updated : Nov 26, 2019, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details