விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் தனது பிரச்சார வாகனத்தில் இருந்து பொதுமக்களிடையே பேசிய அவர், “திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்திருந்தனர். ஆனாலும் திமுகவோ, அதன் தலைவர் ஸ்டாலினோ திருந்தவில்லை. எனவே, மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி, இத்தேர்தலோடு திமுகவிற்கு முடிவுரை எழுத வேண்டும்.
10 ஆண்டுகள் வனவாசம் சென்றும் திமுக திருந்தவில்லை!
விழுப்புரம்: இந்த தேர்தலோடு திமுகவிற்கு மக்கள் முடிவுரை எழுத வேண்டும் என விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது மக்கள் அரசாங்கம். நீங்கள் சொல்வதைக் கேட்பதே எங்கள் வேலை; நாங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். போன தைப்பொங்கல் தொடங்கி இந்த தைப்பொங்கல் வரை குடும்பத்திற்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 2,000 அம்மா மினி கிளினிக்குகளை திறந்து மக்களுக்காக சேவையாற்றி வருகிறோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்படும். கிராமம் தொடங்கி நகரம் வரை கேபிள் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு இலவச சேவை வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.25 ஆயிரம் புதிய வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் ஏஜெண்டு...மோடி உலகத்தின் ஏஜெண்டு: சீமான்!