தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுளள இரங்கல் செய்தியில், 'விழுப்புரம் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.கிருஷ்ணன் ஜூன் 27ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
விழுப்புரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய பி.கிருஷ்ணன், பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, விழுப்புரம் மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தவர்.