விழுப்புரம்:தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று (19.7.2022) இரவு சுமார் 9.45 மணியளவில் மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராம எல்லை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (45), வெங்கடேஷ் (44) மற்றும் மகன் சுப்பிரமணி (40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.