தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் - Citizenship Amendment Act

விழுப்புரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

cbi-protests-against-citizenship-amendment-act
cbi-protests-against-citizenship-amendment-act

By

Published : Feb 19, 2020, 11:58 AM IST

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் தொடர்ச்சியாக அச்சட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும், அச்சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தும் கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறையை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் எனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஏ.வி. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: புதுச்சேரி-யாழ்ப்பாணம் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து - மத்திய இணையமைச்சர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details