விழுப்புரம்: கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.