கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதும் வருகிற மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு விதிகள் இன்றுவரை கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக அனைத்து வித போக்குவரத்துகளும் மாநிலம் முழுவதும் மே 31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில் நேற்று அனுமதியின்றி இயக்கப்பட்ட 46 வாகனங்களை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.