தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை: பெண்கள் இருவர் கைது! - Sale of cannabis

விழுப்புரம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

By

Published : Jul 28, 2020, 10:27 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் ரயில்வே காலனியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் அந்த பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் பணம்

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பெண்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், ரூ. 5,700 ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ரூ.3.60 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details