மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதேபோல், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போக்குவரத்து உள்ளிட்ட அரசு சேவைகள் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த போராட்டத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கிவருகின்றன.