புதுச்சேரி மாநிலம் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவர் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இரண்டாம் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆக.27) பிற்பகலில் பணிமனையின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலூகா காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை! போலீஸ் விசாரணை - விழுப்புரத்தில் ஓட்டுநர் தற்கொலை
Bus driver
08:14 August 28
விழுப்புரம்: அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணிமனையின் பின்புறம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Last Updated : Aug 28, 2020, 1:50 PM IST