தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படியில் தொங்கிய மாணவர்களால் பஸ்ஸை விட்டு இறங்கி காவல் நிலையத்தை நோக்கி ஓடிய பேருந்து ஓட்டுநர்!

விழுப்புரம் பேருந்தில் மாணவர்கள் எவ்வளவு சொல்லியும் படியில் தொங்கியபடி பயணம் செய்ததால், பயணிகளுடன் வந்த பேருந்தை பாதி வழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.

பயணிகளுடன் பேருந்தை பாதி வழியில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்தை நோக்கி ஓடிய பேருந்து ஓட்டுநர்
பயணிகளுடன் பேருந்தை பாதி வழியில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்தை நோக்கி ஓடிய பேருந்து ஓட்டுநர்

By

Published : Jul 29, 2022, 9:15 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் பழைய பேருந்து நிலையம் முதல் தாதம் பாளையம் வழித்தடத்தில் செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று வழக்கம்போல் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது தனியார் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணத்தைத்தொடங்கியது. பேருந்தின் உள்ளே போதுமான அளவு இடமிருந்தும் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.

பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் பலமுறை 'உள்ளே வாருங்கள்' என்று கூறியும், 'தங்களால் வர முடியாது' என்று கூறியபடி படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். குறிப்பிட்ட சில நேரம் வரை அமைதி காத்த பேருந்தின் ஓட்டுநர், தன்னுடைய பொறுமையை இழந்து பேருந்தை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு நேராக விழுப்புரம் தாலுகா காவல்நிலையம் சென்று முறையிட்டுள்ளார்.

ஓட்டுநரின் புகாரை அடுத்து பேருந்து நிற்கும் இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். அங்கு காவல் துறையினரை கண்டு சில மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அதே பேருந்தில் காவல்துறையைச்சார்ந்த காவலர் ஒருவர் பயணம் செய்தார்.

படியில் தொங்கிய மாணவர்களால் பஸ்ஸை விட்டு இறங்கி காவல் நிலையத்தை நோக்கி ஓடிய பேருந்து ஓட்டுநர்!

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் குறுவை பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தர்ணா

ABOUT THE AUTHOR

...view details