விழுப்புரம்: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து வினாடிக்கு 7,321 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பில்லூர்- சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி 3 அடி உயரத்திற்கும் மேலாக தண்ணீர் செல்கிறது. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறிப்பாக ஆனாங்கூர், பில்லூர், தென்மங்கலம், அரசமங்கலம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட சுமார் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம்... 20 கிராம மக்கள் அவதி...
சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான நீரால் தென்பெண்ணை மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம், 20 கிராம மக்கள் அவதி
ஆனால், சிலர் ஆபத்தை உணராமல் வெள்ள நீரிலேயே நடந்து செல்வதும், இரு சக்கர வாகனங்களை இயக்குவதும், குளிப்பதுமாக சில விபரீத செயல்களை செய்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளான கோரையாறு,மலட்டாறு,பம்பை ஆறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரோட்டில் வீடுகளில் புகுந்த வெள்ளம்