கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தனபால். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது நிலத்தில் இருந்த மின் இணைப்பை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறு தடயம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக தனபாலிடம் ரூ.3500ஐ மின்வாரிய ஊழியர்கள் குபேந்திரன், விஜயகுமார் ஆகியோர் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து தனபால் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளார்.
பின்னர் ஊழல் தடுப்பு அலுவலரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மின்வாரிய ஊழியர்களிடம் தனபால் லஞ்சமாக வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஊழல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், விஜயகுமார், குபேந்திரன் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்துள்ளனர். இதுத்தொடர்பான வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.