தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டில் கரை உடைப்பு - villupuram tenpennai dam

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட தளவானூர் அணைக்கட்டின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்
விழுப்புரம்

By

Published : Jan 23, 2021, 7:21 PM IST

விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கடலூர் மாவட்டம் திரிமங்கலம் இடையே 25 கோடியே 35 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று தடுப்பணையை திறந்துவைத்தார்.

இந்த தடுப்பணை 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த தடுப்பணை மூலம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் 150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

இந்நிலையில் தடுப்பணை திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் அதன் கரைப் பகுதி உடைந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. பொதுப்பணித்துறை அலுவலர்கள் கரையை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

மூன்று மாதங்களே ஆன நிலையில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற நிலையில் தடுப்பணை கட்டப்பட்டதே இதற்கு காரணம் என்று விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details