விழுப்புரம்:பெருவளூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் விவசாயி லீலா வினோதன் (23). இவர், கடந்த மாதம் 28ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று (ஆக.02) மூளைச்சாவு அடைந்தார். இதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்த நிலையில் அதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.