விழுப்புரம் அடுத்த கக்கனூரைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் மூளைச்சாவு அடைந்ததைத்தொடர்ந்து, அவரின் உடலுறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக மருத்துவக்குழுவினரால் அவரின் உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகம், இரண்டு கருவிழிகள், இரண்டு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, சென்னை மற்றும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.