தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவிற்காக ரத்த தானம் அளித்த தொண்டர்கள்! - ammk General Secretary Sasikala birthday celebration

விழுப்புரம்: அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பிறந்த நாளையொட்டி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) ரத்த தான முகாம் நடைபெற்றது.

blood donation camp held in villupuram for ammk General Secretary Sasikala birthday celebration
blood donation camp held in villupuram for ammk General Secretary Sasikala birthday celebration

By

Published : Aug 18, 2020, 1:28 PM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் 63ஆவது பிறந்த நாள் விழா இன்று (ஆகஸ்ட் 18) தமிழ்நாடு முழுவதும் உள்ள அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறுப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட அமமுகவினர் சார்பில் சசிகலாவின் பிறந்த நாளையொட்டி இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் ஆர்.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details