தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளிமலையில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் - vilupuram district News

விழுப்புரம் :கல்வராயன் மலையில் உற்பத்தியாகக்கூடிய நீர் கோமுகி அணைக்கு செல்லவிடாமல் சேலம் மாவட்டத்துக்கு திருப்பி விடுகின்றனர்.இந்த பணியை ரத்து செய்ய வேண்டி நாளை கருப்புக்கொடி ஏந்தி வெள்ளிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தெரிவித்துள்ளார்.

Black flag demonstration in vilupuram
Black flag demonstration in vilupuram

By

Published : Aug 7, 2020, 3:02 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியில் முறைகேடு நடந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுத்தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கடந்த ஒருவருட காலமாக காணமல்போன கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞரை தனிப்படைகள் அமைத்து தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ளது.

விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தென்பெண்ணையாற்றில் அன்டாரயநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியால் குடிநீர் பிரச்னை,விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த மணல் குவாரியை மூட வலியுறுத்தி வருகிற 19ஆம் தேதி திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் இதுதொடர்பாக சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் 48 ஏரிகளை ஒரே நபர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த பணியில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்க முழுவீச்சில் செயல்பட வேண்டும். இதேபோல் கல்வராயன் மலையில் உற்பத்தியாகக்கூடிய நீர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி அணைக்கு செல்லவிடாமல் சேலம் மாவட்டத்துக்கு திருப்பி விடுகின்றனர். இதற்காக 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த பணியை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து வெள்ளிமலையில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details