தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேது சமுத்திரத் திட்டத்தை குறித்து பேசிய திமுகவுக்கு பாஜக கண்டனம்! - bjp narayanan slamming dmk

விழுப்புரம்: சேது சமுத்திரத் திட்டத்தை சீன விவகாரத்தோடு திமுக ஒப்பிட்டுப் பேசுவது கண்டனத்திற்குரியது என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

bjp narayanan slamming dmk
bjp narayanan slamming dmk

By

Published : Jul 12, 2020, 3:04 PM IST

விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "பாஜக தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான, அத்தனை நலன்களையும் கருதி பல்வேறு திட்டங்கள் மூலமாக நிறைவேற்றி வருகிறது.

இதனால், மாநில மக்கள் அனைத்து திட்டங்கள் மூலமும் பயனடைகிறார்கள். மேலும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கண்டனத்திற்குரியது.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கக்கூடிய மதிப்பு ஓய்வூதியம் ரத்து என்பது, மத்திய அரசுக்கு எதிரானது என்றால், மத்திய அரசாங்கம் இதற்கான ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

அதில் எந்த மாநிலத்திலும் கரோனா தொற்றைத் தடுப்பதற்காக பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்த மதிப்பூதியமும் ரத்து செய்யக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து திமுக கட்சி ராமர் சேது திட்டத்தை சீன எல்லையில் நடந்த பொருளோடு ஒப்பிட்டுப் பேசுவது கண்டனத்திற்குரியது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details